Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
சந்திர பெயர்ச்சியால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழை கொட்டப்போகுது..
Moon Mars Conjunction Make Mahalakshmi Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதுடன், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் ஏப்ரல் 03 ஆம் தேதி, அதாவது இன்று கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 06 ஆம் தேதி சந்திரன் இந்த கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் கடக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.

மேலும் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. முக்கியமாக இந்த ராஜயோகமானது சந்திரனின் சொந்த ராசியான கடக ராசியில் நிகழ்வதால் சற்று சிறப்பானதாக கூறப்படுகிறது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
இதன் விளைவாக திடீர் நிதி நன்மைகளையும், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட போகிறது. இப்போது சந்திரன் செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் வணிகம் தொடர்பாக பயணங்களை அதிகம் மேற்கொள்வீர்கள். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் வகையில் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். போட்டி தேர்வுகளை எழுதியுள்ள மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றியைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் முடிவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்பைப் பெறலாம். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பு அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைபேறும். முக்கியமாக நிறைய பணத்தை உங்களால் சேமிக்க முடியும்,
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
