Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
அக்டோபரில் 2 முறை நிகழும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படபோகுது..
Mercury Transit Will Occur Twice In October 2024: ஜோதிடத்தில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் என்றால் அது புதன் தான். இந்த புதன் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். மேலும் இவர் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், பரப்பு ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியுமாவார்.
இப்படிப்பட்ட புதன் தற்போது தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார். அதில் முதலாவதாக அக்டோபர் 10 ஆம் தேதி புதன் துலாம் ராசிக்கும், இரண்டாவதாக அக்டோபர் 29 ஆம் தேதி விருச்சிக ராசிக்கும் செல்லவிருக்கிறார்.

இப்படி ஒரே மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாமும் கிடைக்கப் போகிறது. இப்போது அக்டோபரில் 2 முறை நிகழும் புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
புதன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தொழிலில் சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். அவ்வப்போது எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். இம்மாதத்தில் உங்களின் பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். இது மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் அக்டோபர் மாதத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களுக்குள் ஒரு நல்ல மாற்றத்தையும் காண்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் அக்டோபரில் வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றி கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் இந்த மாதத்தில் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
