Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
அக்டோபரில் 2 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mercury Transit Twice In October 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். அவ்வாறு கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியையும், தனது நிலையையும் மாற்றக்கூடியவர். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளின் அதிபதியுமாவார். இப்படிப்பட்ட புதன் அக்டோபர் மாதத்தில் இரண்டு முறை தனது நிலையை மாற்றக்கூடியவர்.

அதில் முதலாவதாக அக்டோபர் 02 ஆம் தேதி புதன் உதயமாகவுள்ளார். அதன் பின் அக்டோபர் 03 ஆம் தேதி துலாம் ராசிக்கு செல்லவுள்ளார். இப்படி அடுத்தடுத்த நாட்கள் புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப்போகிறது. அதுவும் வருமானத்தில் நல்ல உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது அக்டோபரில் 2 முறை புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
அக்டோபரில் 2 முறை புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் துவாம் ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக பணியிடத்தில் இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இம்மாதத்தில் பேச்சுத்திறன் மேம்படும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள் மற்றும் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
விருச்சிகம்
அக்டோபரில் 2 முறை புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் விருச்சிக ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். முக்கியமாக பல வழிகளில் இருந்து நிறைய பணம் தேடி வரும். இம்மாதத்தில் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்
அக்டோபரில் 2 முறை புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் தொழில் ரீதியாக இம்மாதம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications