Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது...
Mercury Transit In Virgo 2025: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு அந்த கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது குறிப்பிட்ட வீடுகளில் நுழையும் போதோ, சுப அல்லது ராஜயோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் சற்று சிறப்பானதாக இருக்கும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணயாவார். இந்த புதன் செப்டம்பர் 15 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைகிறார். சொந்த ராசிக்கு புதன் செல்வதால், பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ரா ராஜயோகம் உருவாகும்.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறது. இதன் விளைவாக அந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிப்பதோடு, தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது சொந்த ராசிக்கு செல்லும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் இருமடங்கு வேகத்தில் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகி, கைக்கு அந்த சொத்து வந்து சேரும்.
சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சுத் திறன் அதிகரிக்கும். இந்த பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சொல்லப்போனால் பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
மார்கெட்டிங், ஊடகம், வங்கி போன்ற துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சொந்த அடையாளத்தை உருவாக்குவார்கள்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். புதன் அதிர்ஷ்டத்மைத அள்ளித் தரப்போகிறார். தொழிலில் பல சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். புதிய வருமான வழிகள் திறக்கும் வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தொடர்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் கனவுகளை கொண்டிருந்தால், இக்காலத்தில் அந்த கனவு நனவாகும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
