Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம்
திருவாதிரை நட்சத்திரம் சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்..
Mercury Transit In Thiruvaathirai Nakshatra 2025: கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். இந்த புதன் ஜூன் 06 ஆம் தேதி தான் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழைந்தார். 1 வருடம் கழித்து புதன் தனது சொந்த ராசிக்குள் நுழைந்துள்ளார்.
இந்த புதன் ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், தொடர்பு, வணிகம், கல்வி மற்றும் பகுத்தறிவின் அதிபதியாகக் கருதப்படுகிறார். இப்படிப்பட்ட புதன் ஜூன் 09 ஆம் தேதி திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு.

புதன் ராகுவின் நட்சத்திரத்திற்கு சென்றிருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் ஜூன் 16 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் புனர்பூச நட்சத்திரத்திற்கு செல்வார்.
ஜோதிடத்தில் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். திருவாதிரை நட்சத்திரம் உணர்ச்சி மாற்றங்கள் மற்றும் ஆழமான அனுபவங்களைக் குறிக்கிறது. எனவே இந்த நட்சத்திரத்திற்கு புதன் செல்வதால், எழுத்து, பத்திரிகை, தொழில்நுட்பத் துறை, வணிகம் அல்லது கல்வித் துறைகளில் இருப்பவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இருப்பினும், ராகுவின் செல்வாக்கு காரணமாக, அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குழப்பம் அல்லது இழப்புக்கு வழிவகுக்கும். இப்போது புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் பேச்சுத் திறன் மேம்படும். ஒரே நேரத்தில் பல பணிகளை எளிதாக முடிப்பீர்கள். வணிகம், கல்வி மற்றும் தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் திருவாதிரை நட்சத்திரத்தின் தீவிர ஆற்றல் சில நேரங்களில் தவறான புரிதலை ஏற்படுத்தும் என்பதால், நீங்கள் அவசரமாகப் பேசுவதையோ அல்லது முடிவுகளை எடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். வெளிநாட்டில் படிக்க அல்லது வேலை செய்ய வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கும் இக்காலம் சாதமாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். திருமண வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் மேம்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். அதுவும் இந்த பெயர்ச்சியால் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு, மரியாதை மற்றும் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வு பற்றி யோசிப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தொழில்நுட்பம், எழுத்து மற்றும் கல்வி தொடர்பானவர்களுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கும். ஆனால் ராகுவின் தீவிர ஆற்றல் காரணமாக, அதிக தன்னம்பிக்கையைத் தவிர்ப்பது அவசியம், மேலும் பெரிய முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications