Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
புதன் ரிஷப ராசியில் இருப்பதால் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...!
Mercury Transit In Taurus 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியுமாவார். இப்படிப்பட்ட புதன் ஒரு ராசியில் குறுகிய நாட்களில் பயணிக்கக்கூடியவர். அதுவும் இவர் ஒரு மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றும் அளவில் குறுகிய காலம் இருக்கக்கூடியவர்.
அந்த வகையில் புதன் மே 23 ஆம் தேதி சுக்கிரனின் ரிஷப ராசிக்குள் நுழைந்தார். புதன் இந்த ரிஷப ராசியில் ஜூன் 10 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் அவர் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழைவார். புதன் ரிஷப ராசியில் நுழைந்ததால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக இருந்தாலும், சில ராசிக்காலர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் நிதி, குடும்பம், தொழில் ஆகியவற்றில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது புதன் ரிஷப ராசியில் இருப்பதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் பயணித்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். குழந்தைகளின் படிப்புக்காக நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். சிறு சிறு விஷயங்களுக்கு கூட வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதனின் தாக்கத்தால் தன்னம்பிக்கை குறையக்கூடும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாதிக்கப்படலாம்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் பயணித்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை பலவீனமாக இருக்கும். முக்கிய வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். இதன் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பேசும் போது சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இக்காலத்தில் வாயைக் கட்டுப்படுத்தினால், பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் பயணித்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று மோசமாக இருக்கும். இக்காலத்தில் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். உங்களை வீழ்த்த பல முயற்சிகளை எடுப்பார்கள். யாரையும் இந்த காலகட்டத்தில் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வணிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கலாம். அதுவும் அழற்சி அல்லது சரும பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். இக்காலத்தில் அவசரத்தை தவிர்க்க வேண்டும். முக்கியமாக தொழில் தொடர்பான முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
