Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பணமழை கொட்டப்போகுதாம்... உங்க ராசி என்ன?
அறிவு மற்றும் ஞானத்தை வழங்குவதாக கருதப்படும் கிரகமாக புதன் கருதப்படுகிறது, புதன் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார். அக்டோபர் 29 ஆம் தேதி புதன் விருச்சிக ராசிக்குச் செல்கிறார். புதனின் இந்த சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அடையப்போகிறார்கள். இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்கள் தற்போதுள்ளதை விட இரண்டு மடங்கு பணத்தை பெற வாய்ப்பு உள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். வாழ்க்கையில் பல எதிர்பாராத மகிழ்ச்சியான தருணங்கள் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் கண்டறியலாம். உங்களின் முதலீடுகள் உங்களுக்கு பல மடங்கு லாபங்களைக் கொடுக்கும்.
எனவே உங்கள் பணம் பலமடங்காக உங்களுக்குத் திரும்ப கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும் காலம் வரும். மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும். பிரச்சனை என்று நினைக்கும் பல விஷயங்களை மிக எளிமையாக நீங்கள் கடந்து விடலாம்.
துலாம்
புதனின் தாக்கத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு வேலை சம்பந்தமான விஷயங்களில் நல்ல பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும், இதனால் அதிக லாபம் கிடைக்கும்.
குழந்தைகள் மூலம் நீங்கள் சில நல்ல செய்திகள் தேடிவரும், அவர்களின் வெற்றி உங்களுக்கு மரியாதையை பெற்றுத்தரும். வீட்டில் சில சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறப்பான செயல்பாடுகள் இருக்கும். வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு இது நல்ல நேரம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அவர்களின் எதிரிகளை வென்று வெற்றிக்கொடி நாட்டுவார்கள். பலர் உங்களுக்கு தேடிவந்து உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பெரிய வெற்றியை அடையலாம். உங்களின் நீண்ட கால பிரச்சினைகள் இப்போதும் மிகவும் எளிதாக தீர்க்கப்படும். இது உங்கள் பெயரும் புகழும் சமூகத்தில் அதிகரிக்க உதவும்.
உங்கள் திறமைகளை உங்கள் குடும்பத்தினர் அங்கீகரிப்பார்கள். உங்கள் மனைவியிடமிருந்து பல விஷயங்களுக்கு முழு ஆதரவைப் பெறுவீர்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு திருமணம் கைக்கூடும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் எதிர்பாராத நற்பலன்களைப் பெறலாம். வாழ்க்கையில் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழல் அவர்களுக்கு அமையும். அலுவலகத்தில் நீண்டகாலமாக இருந்துவந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு அலுவலகத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் இலாபம் கொடுக்கும் ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
