Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
ஆண்டின் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: புத்தாண்டில் இந்த 3 ராசிக்கு தொழிலில் வளர்ச்சி ஏற்படும்..
Mercury Transit in Sagittarius 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் கிரகங்களிலேயே புதன் குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர்.
புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். முக்கியமாக புதன் அடிக்கடி ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். அந்த வகையில் புத்திகாரகனான புதன் டிசம்பர் மாதத்தில் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.

அதுவும் இந்த புதன் பெயர்ச்சியானது டிசம்பர் 29 ஆம் தேதி நடக்கப் போகிறது. இந்த தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசியில் புதன் நுழையும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் புதனின் அருளால் தொழிலில் நல்ல முன்னேற்றங்களைக் காண்பார்கள்.
வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன. அதுவும் இந்த புதன் பெயர்ச்சி ஆண்டின் இறுதியில் நடப்பதால், புத்தாண்டின் தொடக்கம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான துறையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் உயரும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். இதன் மூலம் உங்களின் நிதி நிலை உயரும் பங்குச் சந்தை, லாட்டரி மூலம் நிறைய லாபத்தைப் பெறுவீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புத்திசாலித்தனத்தால் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தைகள் தொடர்பாக சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டிகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications