Latest Updates
-
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
2025-ல் நடக்கும் முதல் புதன் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கப்போகுது...
Mercury Transit In Sagittarius 2025: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒருகுறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் என்றால் அது புதன். அதுமட்டுமின்றி இந்த புதன் அவ்வப்போது தனது அஸ்தமனமாவது, உதயமாவது, வக்ரமாவது என்று பல நிலைகளில் பயணிப்பார்.
இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி 2025 ஆம் ஆண்டு சிறப்பானதாக கருதப்படுகிறது. இதற்கு இந்த ஆண்டில் நிகழவிருக்கும் பெரிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் தான் காரணம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் புதன் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் இப்பெயர்ச்சியின் போது புதன் விருச்சிக ராசியில் இருந்து குரு பகவானின் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார்.

தனுசு ராசிக்கு புதன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியானது பம்பர் பலன்களைத் தரப்போகிறது. இப்போது 2025 ஜனவரி முதல் வாரத்தில் நடக்கும் புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டின் முதல் வாரத்திலேயே அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதன் மூலம் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்ள். மாணவர்களும் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மகிழ்ச்சி பெருகும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்குவது நல்ல பலனைத் தரும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியுடன் லாபமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பண வரவு அதிகரிக்கும். இதனால் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். கடினமான வேலைகளையும் எளிதில் முடிப்பீர்கள். வெளியூர் தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்க சாதகமான காலம். உறவுகள் வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications