Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
துலாம் ராசியில் புதன் உதயமாவதால் இந்த 3 ராசிக்காரங்க பெரிய நஷ்டத்தை சந்திக்கப் போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் அறிவாற்றல் மற்றும் தகவல்தொடர்பு திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் கிரகங்களில் புதன் ஒன்றாகும். கன்னி மற்றும் மிதுன ராசியை ஆளும்கிரகமான இது அடிக்கடி ராசியை மாற்றிக் கொள்கிறது. தற்போது புதன் துலாம் ராசிக்கு நகரப் போகிறார்.
துலாம் ராசியின் அதிபதியான புதன் மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்கள். அக்டோபர் 22-ஆம் தேதி துலாம் ராசியில் புதன் உதயமாகிறார். இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான விளைவுகளையும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தப்போகிறது. இந்த பதிவில் புதன் பெயர்ச்சியால் ஆபத்தை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் 3ம் வீட்டிற்கும் 6ம் வீட்டிற்கும் அதிபதியாகிறார். இவர்களுக்கு தற்போது புதன் 7ம் வீட்டில் இருக்கிறார். இந்த கிரக மாற்றத்தின் விளைவாக பொருளாதாரரீதியாகவும் தொழில்ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, துலாம் வழியாக புதன் சஞ்சரிக்கும் போது உங்கள் வேலையை சரியாக முடிப்பதில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும், ஏனெனில் அவை தவறாக முடிய வாய்ப்புள்ளது.
உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து நீங்கள் அதிக தடைகளை நீங்கள் எதிர்பார்க்கக்கூடும் என்பதால், உங்கள் பணியை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். நீங்கள் வேலையில் அதிக அழுத்தத்தை உணரலாம். உங்கள் தொழிலில் நீங்கள் புதிய போட்டியாளர்களை சந்திக்கலாம். இதன் விளைவாக உங்கள் வருமானம் குறையலாம். குறைந்த லாபத்தின் விளைவாக உங்கள் நிறுவனத்தில் கூடுதல் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் 2ஆம் வீட்டையும் 5ஆம் வீட்டையும் ஆட்சி செய்கிறார். இப்போது புதன் 6ம் வீட்டிற்கு மாறுகிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு இது அனுகூலமான பெயர்ச்சி அல்ல, ஏனெனில் அவர்கள் இந்த நேரத்தில் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் இழப்புகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உங்கள் வேலையில் நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு வெகுமதி அளிக்காமல் போகலாம். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கைநழுவிப் போகலாம்.
வியாபாரத்தில் இப்போது அவர்கள் குறிப்பிடத்தக்க நஷ்டத்தை அனுபவிக்கலாம். சந்தையில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் கடுமையான போட்டி உங்கள் நிறுவனத்தை பாதிக்கக்கூடும். நீங்கள் நிதி நெருக்கடியை அனுபவிக்கலாம் மற்றும் கடனில் சிக்கலாம். இந்த காலகட்டத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு புதன் 4வது மற்றும் 7வது வீடுகளை ஆட்சி செய்கிறது, தற்போது 8வது வீட்டில் சஞ்சரிக்கிறது. வேளையில் இருக்கும் மீன ராசிக்காரர்கள் அவர்களின் டார்கெட்டுகளை அடையமுடியாமல் சிரமப்படலாம். துலாம் ராசியில் உள்ள புதன் சஞ்சாரம் காரணமாக உங்கள் முதலாளி உங்கள் மீது அதிக சுமைகளை ஏற்படுத்தலாம், வெளிப்புற அழுத்தம் காரணமாக பெரிய முடிவுகளை எடுக்க நீங்கள் கட்டாயப்படுத்தலாம் அல்லது வேலையில் தவறு செய்யும் ஆபத்தில் சிக்கலாம்.
நீங்கள் ஒரு வியாபாரியாக இருந்தால், நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகள் முன்னேற்றம் அடைவார்கள். நீங்கள் சரியான திசையில் செல்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த நிபுணர்களின் உதவியை நாட வேண்டும். உங்கள் பொருளாதார நிலை உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமண வாழ்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

