Latest Updates
-
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்!
1 வருடத்திற்கு பின் சிம்மம் செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்...
Mercury Transit In Leo On August 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வணிகம், பொருளாதாரம், பகுத்தறிவு ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட. கிரகங்களிலேயே புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக வேகமாக தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 21 நாட்கள் பயணிப்பார்.
தற்போது புதன் சந்திரனின் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்த கடக ராசியில் புதன் ஆகஸ்ட் 30 வரை இருப்பார். அதன் பின் சூரிய பகவானின் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசிக்கு புதன் 1 வருடத்திற்கு பின் செல்லவுள்ளார். கிரங்களில் புதன் சூரியனுக்கு மிக நெருக்கமான கிரகமாக கருதப்படுகிறது.

இதனால் இவ்விரு கிரகங்களுக்கும் இடையே நட்புணர்வு உள்ளது. ஆகவே புதன் சிம்ம ராசிக்கு செல்வது சற்று சிறப்பானதாக கருதப்படுவதோடு, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான விளைவுகளை உண்டாக்கக்கூடும். அதுவும் புதன் சிம்ம ராசிக்குள் அஸ்தமன நிலையில் நுழையவுள்ளார்.
ஆகவே இந்த புதன் பெயர்ச்சியால் சூரியனின் ஆதிக்கம் சற்று அதிகமாகவும், புதன் சற்று பலவீனமாகவும் இருக்கும். இப்படியான சூழ்நிலையில் இந்த புதன் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப்போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார்கள். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வ நிலையிலும் உயர்வு ஏற்படும். தாயுடனான உறவு மேம்படும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறக்கூடும். உறவுகளில் உள்ள பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனை பாராட்டி, பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வை கொடுக்க வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். புதிய ஆடைகள், நகைகள் போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட கால ஆசை இக்காலத்தில் நிறைவேறும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். தேர்வுகளில் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். பரம்பரை தொழிலில் இருப்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் நல்ல நிதி பலனைத் தரும் வகையில் இருக்கும். இருந்தாலும், இக்காலத்தில் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. .
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுபெறும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை மற்றும் தைரியடும் அதிகரிக்கும். வாழ்க்கையில் பல மாற்றங்களையும் காணக்கூடும். இருந்தாலும், ஏற்கனவே சிம்ம ராசியில் பயணித்து வரும் கேதுவின் தாக்கம் புதன் மீது இருப்பதால், சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆயினும் இந்த சிக்கல்கள் அனைத்தையும் சதுர்யமாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பேச்சால் பல முக்கியமான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications