Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 30 முதல் இந்த 3 ராசிக்கு வெற்றிகள் குவியப்போகுது..
Mercury Transit in Leo On 30 August 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார் மற்றும் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக வேகமாக தனது நிலையை மாற்றக்கூடியவர் புதன்.
குறுகிய காலத்தில் புதன் தனது நிலையை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் தற்போது புதன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்கு செல்லவுள்ளார். புதனும், சூரியனும் நட்பு கிரகங்களாக கருதப்படுகிறது. இதனால் இந்த புதன் பெயர்ச்சியானது சற்று சிறப்பானது.

சிம்ம ராசிக்கு புதன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதுவும் சில ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், ஒவ்வொரு வேலையிலும் வெற்றியை பெறக்கூடும். சிலருக்கு வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் வரலாம். இப்போது புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. செய்யும் வேலைகளில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களின் மூலம் நல்ல பலனைப் பெற வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் புதிய கூட்டாளர்களைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வணிகர்கள் முதலீடுகளால் நல்ல பலனைப் பெறுகூர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் வகையில் இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications