Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் மே 21 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Mercury Transit In Krithikai Nakshatra 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் என்றால் அது புதன் ஆவார்.
இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார். இப்படிப்பட்ட புதன் வருகிற மே 21 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது புதன் கிருத்திகை நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன்.

ஜோதிடத்தில் சூரியனுக்கும், புதனுக்கும் இடையே நட்புறவு உள்ளது. இதனால் புதன் சூரியனின் நட்சத்திரத்திற்கு செல்லும் போது, அதன் தாக்கம் சற்று சிறப்பானதாகவே இருக்கும். அதுவும் சில ராசிக்காரர்கள் இந்த புதன் நட்சத்திர பெயர்ச்சியால் திடீர் நிதி நன்மைகளுடன், தொழிலில் முன்னேற்றத்தையும் காணும் வாய்ப்புள்ளது. இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான பலன்களைத் தரும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. மன வலிமை அதிகரிக்கும் மற்றும் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கலாம். அரசு வேலை செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, பதவி உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சிலருக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
