Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
புதன் கேட்டை நட்சத்திரத்திற்கு செல்வதால் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் போலவே நட்சத்திர மாற்றங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மற்ற நட்சத்திரங்களை விட சில நட்சத்திரங்கள் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு நட்சத்திரம்தான் கேட்டை. மற்ற நட்சத்திரங்களில் நுழைவதை விட கிரகங்கள் கேட்டை நட்சத்திரத்தில் நுழையும் போது அதிக நன்மைகளைத் தருவதாக நம்பப்படுகிறது. தற்போது புதன் கேட்டை நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார்.
கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், கேட்டை நட்சத்திரத்தில் நுழைவதால், 3 ராசிக்காரர்களை விட்டு கெட்ட நேரம் ஓடப்போகிறது. இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் அளவில்லாத நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற முடியும். அந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
தற்போது துரதிர்ஷ்டமான காலத்தை அனுபவித்து வரும் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல காலம் பிறக்கப்போகிறது. இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதிரீதியாக பல நன்மைகள் காத்திருக்கின்றன. இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் பெரும்பாலான நிதிச் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைய முடியும். இந்த ராசிக்காரர்களின் வீடு வாங்கும் கனவு இப்போது நிறைவேறலாம். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
துலாம்
இந்த நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நீண்ட நாட்களாக விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைக்கும்.கடன் சுமைகள் பாதியாக குறைய வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் ஷாப்பிங் செல்ல நேரிடும்.
குடும்ப உறுப்பினர்களுக்கு மதிப்புமிக்க பொருட்களை பரிசாக வழங்கலாம். நண்பர்களால் இப்போது முக்கிய உதவி கிடைக்கும். நல்ல நட்பு உங்களுக்கு ஆறுதல் தரும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கிடைக்கும் லாபத்தால் சேமிப்பு வெகுவாக அதிகரிக்கும்.
கும்பம்
புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும். கடந்த காலங்களில் அவர்களை புண்படுத்தியவர்கள் இப்போது அவர்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். நிதி சிக்கல்கள் குறைந்து வாழ்க்கையில் அமைதி நிலவும்.
வாழ்க்கையில் அவர்களின் இலட்சியத்தை நோக்கிய பயணம் வேகமெடுக்கும். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இது அவர்களை சரியான திசையில் நடக்க உதவும். நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. பல நிதி நன்மைகள் உங்களை நோக்கி வரலாம், இதனை சரியாகப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் வளமாக வாழலாம். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். புதிய சொத்து வாங்குவதன் மூலம் அவர்களின் அந்தஸ்து உயரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

