Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
ஜனவரியில் 2 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இருக்கா?
Mercury Transit In January 2025: நவகிரகங்களில் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, தகவல் தொடர்பு, வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாவார். எனவே ஒருவர் தொழிலில் கொடிகட்டி பறக்க வேண்டுமானால், படிப்பில் கெட்டிக்காரராக இருக்க வேண்டுமானால் புதன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
இந்த புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்தாலோ அல்லது ராகு-கேது போன்ற கிரகங்களின் தாக்கத்தில் இருந்தாலோ அந்த நபர் பேச்சால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதே வேளையில் செவ்வாய் அல்லது சனியின் தாக்கம் இருந்தால், அந்நபர் பேச்சால் நண்பர்களை எதிரிகளாக மாற்றலாம்.

இப்படிப்பட்ட புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். இந்த புதன் 2025 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார். அதுவும் ஜனவரி 18 ஆம் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்வதோடு, அந்த ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.
அதன் பின் ஜனவரி 24 ஆம் தேதி புதன் மகர ராசிக்கு செல்லவுள்ளார். இதனால் சில ராசிக்காரர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதன் விளைவாக மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது 2025 ஜனவரியில் நடக்கும் புதன் பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
2025-ல் நடக்கும் புதன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும் சரும பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
துலாம்
2025-ல் நடக்கும் புதன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வணிகர்கள் எந்த ஒரு புதிய ஒப்பந்தத்தையும் நன்கு சிந்தித்து செய்ய வேண்டும். ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பேச்சே பல மோசமான விளைவுகளை சந்திக்க வைத்துவிடும்.
கும்பம்
2025 ஜனவரியில் நடக்கும் புதன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவுகளில் மனக்கசப்புகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. மொத்தத்தில் உங்கள் பேச்சால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை விட்டு விலகி இருப்பார்கள். மேலும் பணியிடத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். இருந்தாலும், நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். கலை துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
