Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
மிதுன ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க அரியணை ஏறப்போறாங்களாம்...!
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கையில் பல்வேறு விதமான கிரக மாற்றங்கள் ஏற்படும். ஜோதிடரீதியாக, புதன் மற்றும் சுக்கிரனால் உருவாகும் லக்ஷ்மி நாராயண சந்திப்பு சில ராசிகளுக்கு சாதகமான மாற்றங்களை அளிக்கப் போகிறது. ஜூன் 10-ல் புதன் மிதுன ராசிக்குள் நுழைந்துள்ளார். அதனுடன் ஜூன் 12-ம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழைந்துள்ளார். இதன் விளைவாக இந்த இரண்டு கிரகங்களும் லக்ஷ்மி நாராயண யோகத்தை உருவாக்குகின்றன.
ஜூன் 29 அன்று, புதன் கடக ராசிக்குள் செல்கிறார். எனவே 29-ம் தேதி வரை லக்ஷ்மி நாராயண யோகம் சில ராசிக்காரர்களுக்கு பல சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. லக்ஷ்மி நாராயண யோகம் சில ராசிகளுக்கு சாதகமான மாற்றங்களை அளிக்கிறது. அவை எந்தெந்த ராசி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் அவர்களின் 10ம் வீட்டில் உருவாகிறது, இதனால் இவர்களுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது. அதுமட்டுமின்றி இவர்கள் வேலை செய்யும் துறையில் இவர்களுக்கு சாதகமான பலன்கள் காத்திருக்கின்றன. அனைத்து விஷயத்திலும் வெற்றி அவர்களுக்குத் தேடிவரும்.
சமுதாயத்தில் மரியாதை அதிகரித்து அதன் மூலம் பல நல்ல மாற்றங்கள் நிகழ்கின்றன. நிதி நன்மைகள் பல வழிகளில் இருந்து வருவதற்கு வாய்ப்புள்ளது. திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். காதலர்களுக்கு அனைத்து விதமான அனுகூலங்களும், திருமணத்திற்கு வழிவகுக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 7வது வீட்டில் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. இந்த கிரக பெயர்ச்சியால் அவர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் உள்ளன. அவர்கள் வேலை செய்யும் துறையில் புதிய சாதனைகளை செய்வதற்கு வாய்ப்புள்ள உள்ளது.
ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். கல்விக்காக அதிக நேரம் செலவிடலாம். அதுமட்டுமின்றி கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். திருமணத்திற்கு உகந்த நேரம் என்பதால் பொருத்தமான வாழ்க்கைத்துணை தேடிவருவார்கள்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த கிரக பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களின் ஐந்தாம் வீட்டில் உள்ள ராஜயோகத்திலும் இதே போன்ற மாற்றங்கள் ஏற்படும். பெரும்பாலும் அவர்கள் செய்யும் அனைத்தும் வேலைகளிலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது, மனநலமும் நன்றாக இருக்கும்.
நீங்கள் எதிர்பார்ப்பதை விட தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உறவுகளிலும் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதிரீதியான நன்மைகளுக்கான வாய்ப்புகள் தேடிவரும்.
மீனம்
இந்த கிரக பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும் காலம் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகள் உங்கள் வழியில் தேடிவரும். இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்திற்கான நேரம் என்பதில் சந்தேகமில்லை.
நீங்கள் எதிர்பார்க்காத இடங்களிலிருந்து நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளன. வாழ்க்கையை மாற்றும் சாதனைகள் உங்கள் வழியில் வரும். லக்ஷ்மி நாராயண யோகத்தில் நீங்கள் எந்த சிரமத்தையும் சந்திக்க மாட்டீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
