Latest Updates
-
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான்
1 வருடத்திற்கு பின் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mercury Transit In Gemini On June 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். இப்படிப்பட்ட புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் ஆவார். இந்த புதன் தற்போது சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஜூன் 06 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். சுமார் 1 வருடம் கழித்து புதன் தனது சொந்த ராசிக்கு செல்வதால், இந்த புதன் பெயர்ச்சியானது சற்று சிறப்பானது. யாருடைய ஜாதகத்தில் புதன் வலுவான நிலையில் இருக்கிறதோ, அவர்கள் மிகவும் கூர்மையான மனப்பான்மை கொண்டவர்களாகவும், பகுத்தறிவில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

புதன் சொந்த ராசிக்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் மிகப்பெரிய நன்மைகளைப் பெறவுள்ளார்கள். முக்கியமாக வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இப்போது புதன் சொந்த ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். அதுவும் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரலாம். வேலை தேடிக் கொண்டிருந்தால் எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். லாபம் மற்றும் வருமான வீட்டிற்கு புதன் செல்வதால், இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியானது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவுகளில் இனிமையும் இருக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்து முயற்சித்தால் நல்ல வெற்றி கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
