Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம்
கும்ப ராசிக்கு செல்லும் புதன்: பிப்ரவரி 03 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Mercury Transit In Aquarius 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் கிரகங்களில் புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் புதன் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் பிப்ரவரி 03 ஆம் தேதி புதன் சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே ராகு உள்ளார். கும்ப ராசிக்கு செல்லும் புதனின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் இந்த புதன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கப் போகிறது.

குறிப்பாக வியாபாரிகள் தடைகளையும், அதிக மன அழுத்தத்தையும், முடிவெடுப்பதில் குழப்பத்தையும், வேலையில் சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். இப்போது பிப்ரவரி 03 ஆம் தேதி சனி பகவானின் கும்ப ராசிக்கு செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். வேலையில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். சிறு பிரச்சனைகளை முடிக்கவும் அதிக முயற்சி தேவைப்படும். முதலீடுகளை செய்வதையும், பயணங்களை மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். வேலைப்பளுவால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உடன் பிறந்தவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இப்பெயர்ச்சியானது இந்த ராசிக்காரர்களுக்கு சில சவால்களைக் கொண்டுவரக்கூடும். தகவல் தொடர்பு பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் சற்று மந்தமாக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலீடு செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக ஆரோக்கிய பிரச்சனைகளும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடனான உறவுகளில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலையில் அதிருப்தி அதிகரிக்கலாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். பண பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. முடிந்தவரை இக்காலத்தில் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications