Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
புதன் அனுஷ நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரக பெயர்ச்சியும் மிகவும் முக்கியமானதாகும். இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றங்கள் நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா என்பது அவர்களின் ராசியில் நடக்கும் கிரகப்பெயர்ச்சியைப் பொறுத்து அமைகிறது.
ஜோதிடத்தில் புதன் புத்திக்கூர்மை மற்றும் சிந்தனையின் கிரகமாக கருதப்படுகிறது. ஆனால் அது வாழ்க்கையில் எந்தளவுக்கு சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்பதை அறிய வேண்டும். நவம்பர் 1ம் தேதி புதன் அனுஷ நட்சத்திரத்திற்கு மாறினார். இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான மாற்றங்களை கொண்டுவரப்போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
புதனின் இந்த நட்சத்திர மாற்றம் என்பது மேஷ ராசிக்காரர்களுக்கு பல சுப மாற்றங்களை அளிக்கும் காலமாக இருக்கும். இது அவர்களுக்கு பெரும்பாலும் நிதிரீதியான லாபத்தைக் கொடுக்கும், இது அவர்களின் தன்னம்பிகையை அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் உங்களை ஆச்சரியப்படுத்தும். வாழ்க்கையில் ஏற்படும் பல நல்ல மாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். நண்பர்களின் ஆதரவால் உங்களின் பல பணிகள் சுமூகமாக முடியும். பணியிடத்தில் அழுத்தமில்லாத அமைதியான சூழல் நிலவும். இந்த காலங்களில் புதன் உங்களுக்கு பல மகிழ்ச்சியான பலன்களை தருகிறார்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த நட்சத்திர மாற்றம் பல நன்மைகளைத் தரும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் முன்னேற்ற வழியைக் கண்டறிவார்கள். வேலை தேடுபவர்கள் அவர்களின் கனவு வேலையை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். இது உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.
நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும். அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும், இதன் விளைவுகள் தேர்வுகளில் தெரியும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இந்த காலத்தில் தேடிவரலாம். முதலீடு செய்வதற்கு இந்த காலம் மிகவும் சிறந்த காலமாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர மாற்றம் பல சுப பலன்களைத் தருகிறது. அலுவலகத்தில் நிலவி வந்த அழுத்தமான சூழல் மறைந்து சுமூகமான சூழல் நிலவும். உங்களின் நிதிநிலை நீங்கள் நினைத்ததை விட வலுவாக இருக்கும். வேலையில் நேர்மறையான மாற்றங்களும், பாராட்டுக்களும் தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
உங்கள் ஆரோக்கியம் மிகவும் திருப்திகரமாக இருக்கும். அதுமட்டுமின்றி தொழில் வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம். தொழில் மூலம் நல்ல லாபம் தேடிவரும், மேலும் புதிதாக ஒரு தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் ஒற்றுமை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
