Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
துலாம் ராசியில் உதயமாகும் புதன்: அக்டோபர் 22 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mercury Rise In Libra On 22 October 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். கிரகங்களில் சந்திரனுக்கு அடுத்ததாக குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியுமாவார்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் படிப்பில் சிறந்து விளங்குவதோடு, அவரது தொழில் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அந்த வகையில் தற்போது புதன் அஸ்தமன நிலையில் உள்ளார். புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், அவரால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தாமதமும், தடையும் இருக்கும்.

இந்நிலையில் அக்டோபர் 22 ஆம் தேதி புதன் துலாம் ராசியில் உதயமாகவுள்ளார். இப்படி புதன் உதயமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது துலாம் ராசியில் உதயமாகும் புதனால் தொழிலில் நல்ல பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பெரிய வேலைகளைக் கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட காலமாக பணியிடத்தில் சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் நல்ல ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இது எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும். தந்தையுடனான உறவு வலுவடையும்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் ஒப்படைக்கப்பட்ட வேலையை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்களின் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
