Latest Updates
-
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
புதன் கும்ப ராசியில் உதயமாவதால் இந்த 2 ராசிக்காரங்க வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தை சந்திக்கப் போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசராக கருதப்படுகிறார். புதனின் இயக்கத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். பிப்ரவரி 26, 2025 அன்று சனியால் ஆளப்படும் கும்ப ராசியில் புதன் உதயமாகிறது. கும்ப ராசியில் புதன் உதயம் ஒரு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
புதன் கும்ப ராசியில் உதயமாகும் போது, அது ஞானம், தொழில்நுட்ப மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சாதகமாக இருக்கும். புதிய யோசனைகளை சிந்திக்கவும், ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் இணையவும், நீண்டகால தொலைநோக்கு திட்டங்களைப் பரிசீலிக்கவும் இது சரியான காலகட்டமாக இருக்கும்.

கும்ப ராசியில் புதன் உதயம்
கும்ப ராசியில் புதன் உதயமாகும்போது, தொடர்பு, சிந்தனை மற்றும் முடிவெடுப்பது கும்ப ராசியின் பண்புகளான புதுமை, அறிவுசார் சுதந்திரம் மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் மனநிலையால் பாதிக்கப்படும் ஒரு காலத்தைக் குறிக்கிறது. கும்ப ராசி என்பது வழக்கத்திற்கு மாறான கருத்துக்கள் மற்றும் முற்போக்கான சிந்தனையுடன் தொடர்புடைய ஒரு ராசியாகும்.
எனவே கும்ப ராசியில் புதன் உதயமாவது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகள் இந்த மாற்றத்தால் நேர்மறையான மாற்றங்களை சந்திக்கும் போது சில ராசிக்காரர்களுக்கு இது எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது. அவர்கள் பல சிக்கல்களையும், தடங்கல்களையும் சந்திக்கலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
மூன்றாவது மற்றும் பன்னிரண்டாம் வீடுகளின் அதிபதியான புதன், கடக ராசிக்காரர்களுக்குளின் எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலம் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நீங்கள் பல் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
இந்த நேரத்தில் தேவையற்ற பயணங்கள் நிகழ வாய்ப்புள்ளது. உங்கள் அன்புக்குரியவர்களுடன் தவறான புரிதல்கள் ஏற்படலாம். உங்கள் உடன்பிறந்தவர்களுடன் நேர்மறையான உறவைப் பேண முடியாமல் போகலாம், மேலும் இந்த காலகட்டத்தில் அவர்களிடமிருந்து உங்களுக்குத் தேவையான ஆதரவும் கிடைக்காமல் போகலாம்.
இந்த காலக்கட்டத்தில் நீங்கள் நிறைய நிதி சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம், மேலும் உங்கள் செலவுகள் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரிக்கலாம். நீங்கள் வியாபாரத்தில் இருந்தால் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியாது. இந்த நேரத்தில் நீண்ட கால முதலீடுகள் மற்றும் ரிஸ்க் உள்ள முதலீடுகள் போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
புதன் நான்காவது வீட்டில் நிலைபெற்று விருச்சிக ராசியின் எட்டாவது மற்றும் பதினொன்றாவது வீடுகளை ஆளுகிறார். இந்த காலகட்டத்தில் உங்களின் ஆதரவுகளை இழந்து சவால்களைச் சந்திக்க நேரிடும், இந்த காலகட்டம் உங்களுக்கு வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டலாம். அலுவலகத்தில் உங்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படலாம், இது உங்களின் மகிழ்ச்சியைக் கெடுக்கும். வியாபரத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த லாபம் வராமல் இருப்பதுடன் நஷ்டமும் அதிகரிக்கலாம்.
உங்களின் செலவுகள் எதிர்பாராமல் அதிகரிப்பதால் உங்களின் சேமிப்பு கரையத் தொடங்கும். தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க தேவைப்படலாம். செலவுகளுக்கும், வருமானத்திற்கும் இடையில் சமநிலையைப் பராமரிக்க நீங்கள் கடினமாக போராட வேண்டியிருக்கலாம். இந்த அழுத்தங்கள் உங்கள் ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
