Latest Updates
-
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க...
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
Mercury Retrograde In Libra 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் அக்டோபர் 24 ஆம் தேதி வக்ர நிலையில் துலாம் ராசியில் தனது பயணத்தை தொடங்கவுள்ளார். இப்படி புதன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியை காணவுள்ளனர். அதுவும் பணிபுரிபவர்கள் தங்களின் சிறப்பான பேச்சுத்திறன் மூலம் வேலைகளை திறம்பட முடிப்பார்கள். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது புதன் துலாம் ராசியில் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் தொழிலை மாற்ற நினைத்தாலோ அல்லது ஒரு வேலையை செய்ய திட்டமிட்டு அதை நிறுத்தி வைத்திருந்தாலோ, அதை செயல்படுத்த இக்காலத்தில் வாய்ப்புக்கள் கிடைக்கும். முன்பு தவறவிட்ட வாய்ப்பு மீண்டும் கிடைக்கலாம். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இருந்தாலும் இக்காலத்தில் வாக்குறுதியைக் கொடுக்கும் முன் யோசித்து முடிந்தால் மட்டும் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ரமாவதால் இந்த ராசிக்காரர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். வணிகர்களுக்கு பழைய வணிக பரிவர்த்தனைகள் மீண்டும் நடக்க வாய்ப்புகள் கிடைக்கும். தெளிவான பேச்சு வார்த்தை வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தத்தை தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. உறவுகளில் உள்ள தவறான புரிதல்கள் நீங்கி, நம்பிக்கை அதிகரிக்கும். ஆயினும் எந்த ஒரு இறுதி முடிவையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய திட்டங்களை தொடங்குவதற்கு பதிலாக, ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் பணிகளில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்தால் நல்ல பலனைப் பெறலாம். வணிகர்களுக்கு புதிய தொடர்புகள் அதிகம் கிடைக்கும். இதுவரை தடைபட்டு வந்த திட்டங்கள் நல்லபடியாக நடக்கும். பணியிடத்தில் திறமைகள் அங்கீகரிக்கப்படலாம். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் இதுவரை தங்கள் வேலை மற்றும் தொழிலில் எடுத்த முடிவுகளில் உள்ள தவறுகளை உணர்ந்து, அதை மாற்றங்களை செய்து நல்ல பலனைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். சிலர் உயர் அதிகாரிகளிடம் இருந்து மரியாதை, பாராட்டை அல்லது முக்கிய பொறுப்புக்களைப் பெறலாம். நிதி ரீதியாகவும் இக்காலம் சிறப்பாக இருக்கக்கூடும். ஆயினும், இக்காலத்தில் எந்த ஒரு பெரிய வாக்குறுதியை உங்களால் முடிந்தால் மட்டும் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




