Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: நவம்பர் 10 முதல் இந்த 3 ராசிக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்!
Mercury Retrograde In Libra 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். நவகிரகங்களில் புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர்.
இப்படி புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 10 ஆம் தேதி புதன் துலாம் ராசியில் வக்ரமாகவுள்ளார். புதன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது துலாம் ராசியில் வக்ரமாகும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் புதிய வேலையை தொடங்கினால் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புக்களும் உள்ளன. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தடைபட்ட ஒப்பந்தங்கள் திடீரென்று முடிவடையும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். புதனின் ஆசியால் ஏராளமான வசதிகளையும் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாமியார், மாமனாருடனான உறவு வலுவாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மாணவர்கள் உயர்வை கல்வியை திட்டமிட்டால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பேச்சில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை கவரும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மார்கெட்டிங், கல்வி, வங்கி போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சூப்பராக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
