Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
2026-ல் 3 முறை வக்ரமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறப்பாங்க..
Mercury Retrograde 3 Times In 2026: ஜோதிடத்தின் படி, வருகிற 2026 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானது. ஏனெனில் இந்த ஆண்டில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, சில கிரகங்கள் வக்ர நிலையில் பயணித்து மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்.
அதுவும் 2026 ஆம் ஆண்டில் புதன் 3 முறை வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட புதன் 3 முறை வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும். இப்போது 2026 ஆம் ஆண்டில் 3 முறை புதன் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதியான புதன் 2026 ஆம் ஆண்டில் 3 முறை வக்ரமாவதால், இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் நல்ல உயர்வும் ஏற்படலாம். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். இலக்குகளை எளிதில் அடைந்து வெற்றி பெறுவீர்கள். புதனின் அருளால் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
ரிஷபம்
புதன் 2026 ஆம் ஆண்டில் 3 முறை வக்ரமாவதால் ரிஷப ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் திடீர் உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான ஆதாயங்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாட்டில் படிக்கவும், வேலை செய்யவும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
கும்பம்
புதன் 2026 ஆம் ஆண்டில் 3 முறை வக்ரமாவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். முக்கியமாக புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரியில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகள் பலவீனமாக இருப்பதால், வெற்றிகளை குவிப்பீர்கள். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications