Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
புதன் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 01 முதல் இந்த 3 ராசிக்கு தொழில் வாழ்க்கை செழிப்பா இருக்கப்போகுது...
Mercury Nakshatra Transit In Anusham Nakshatra 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றங்களும் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனும், புத்திகாரகனான புதன் நவம்பர் 01 ஆம் தேதி விசாக நட்சத்திரத்தில் இருந்து அனுசம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அனுசம் நட்சத்திரமானது சனி பகவானின் நட்சத்திரமாகும். ஜோதிடத்தில் சனியும், புதனும் நட்பு கிரகங்களாக கருதப்படுகிறது. இதனால் புதன் சனி பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

குறிப்பாக அவர்களின் பண பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது மற்றும் தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியானது பல நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. குறிப்பாக வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. எதிர்பாராத பல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் கௌரவம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வர்த்தம் மற்றும் வணிகர்களுக்கு புதனின் அருளால் நல்ல நிதி நன்மைகளும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. அதாவது பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம்.
கன்னி
புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக பலவிதமான நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படலாம். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் பாராட்டுக்களைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் புதனின் அருளால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications