புதன் உருவாக்கிய கேந்திர யோகம்: இன்று இந்த 3 ராசிகளின் பண கஷ்டம் தீர்ந்து கையில் பணம் குவியப்போகுது..

Mercury Make Kendra Yog 2025: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நவகிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணி புதன் ஆவார்.

புதன் ஒருவரது ஜாதகத்தில் சிறப்பான நிலையில் இருந்தால் தான் அந்நபர் தொழிலில் கொடி கட்டி பறப்பார்கள், படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள், பேச்சால் காரியங்களை வெற்றிகரமாக சாதிப்பார்கள் மற்றும் புத்திசாலியாக இருப்பார்கள். இப்படிப்பட்ட புதன் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவதால் தான், அவ்வப்போது தொழில், படிப்பு போன்றவற்றில் ஏற்றஇறக்கத்தை சந்திக்க நேரிடுகிறது.

Mercury Make Kendra Yog 2025 These Zodiac Signs Get Financial Benefits

இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 03 ஆம் தேதி, மதிய வேளையில் புதனும் யுரேனஸும் ஒருவருக்கொருவர் 90 டிகிரியில் இருந்து கேந்திர யோகத்தை உருவாக்குவார்கள். யுரேனஸ் தற்போது ரிஷப ராசியில் உள்ளது.

இந்த கேந்திர யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது புதன் மற்றும் யுரேனஸால் உருவாகும் கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்

கேந்திர யோகம் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான பலன்களைத் தரும். அதுவும் சூரியனும் புதனுடன் இணைந்து இருப்பதால், உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை அனுபவிப்பீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழில் ரீதியாக நிறைய நன்மைகள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். புதிய சாதனைகளைப் புரிவீர்கள். தன்னம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.

கன்னி

கேந்திர யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகத்தை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள்.

துலாம்

கேந்திர யோகமானது துலாம் ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றியைத் தரப்போகிறது. நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெற்றிகள் குவியும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்தில் உயர்வு ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இக்காலம் முன்னேற்றம், செழிப்பு போன்றவற்றைத் தரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, September 3, 2025, 9:17 [IST]
Desktop Bottom Promotion