புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...

Mercury Make Badra Rajyog On 15 September 2025: ஜோதிடத்தின் படி கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர் தான் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.

தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் செப்டம்பர் 15 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டு பித்ரு பட்சம் செப்டம்பர் 07 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த பித்ரு பட்ச காலத்தில் புதன் தனது சொந்த ராசிக்கு சென்று மகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான பத்ரா ராஜயோகத்தை உருவாக்கவுள்ளது.

Mercury Make Badra Rajyog On 15 September 2025 List Of Lucky Zodiac Signs

இந்த ராஜயோகம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழிலில் முன்னேற்றத்தை காண்பதோடு, வருமானத்தில் உயர்வையும் காணக்கூடும். மேலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இப்போது புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்

மகர ராசியின் 9 ஆவது வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தொழிலில் புதிய வருமான வழிகள் திறக்கப்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நிதி ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் பதவியைப் பெறுவதற்கான பல பொன்னான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

தனுசு

தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முக்கியமான திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இக்காலத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் புத்திசாலித்தனமான முடிவுகளால் நல்ல பலனைப் பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். முக்கியமாக தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மார்கெட்டிங், பேச்சு, ஊடகம் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, September 8, 2025, 22:43 [IST]
Desktop Bottom Promotion