Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
புதன் உருவாக்கியுள்ள பத்ர ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Mercury Made Bhadra Rajyog 2024: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது அஸ்தமனமாகி, உதயமாகவும் செய்யும். அதே சமயம் சில சமயங்களில் கிரகங்களின் நிலைகளால் யோகங்களும் உருவாகும்.
அப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனான புதன் செப்டம்பர் 23 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைந்துள்ளார். இதனால் கன்னி ராசியில் பத்ர ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகமானது ஒருவரது வாழ்க்கையில் பலவிதமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது புதன் உருவாக்கியுள்ள பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்று, பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். வேலைகள் அனைத்தும் வழக்கத்தை விட சிறப்பாக முடிவடையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இந்த யோக காலத்தில் எதிர்பார்த்த அளவில் பண வரவு இருக்கும் மற்றும் வருமானமும் இரட்டிப்பாகும். திருமண வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் மற்றும் அதிர்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். மேலும் பணியிடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்திருப்பீர்கள். நிறைய சாதிப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சொத்து, வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். இதன் விளைவாக பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறவும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சம்பாதிக்கவும், சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
