Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
18 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் நிகழும் கேது-புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Mercury Ketu Conjunction In Leo 2025: ஜோதிடத்தின் படி கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணித்து, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.
அந்த வகையில் நிழல் கிரகமான கேது தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் சுமார் 18 ஆண்டுகள் கழித்து நுழைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சிம்ம ராசியில் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் கேது மற்றும் புதனின் சேர்க்கை சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இந்த கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இதன் மூலம் திடீர் நிதி ஆதாயங்கள், தொழிலில் முன்னேற்றம் போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் ஒன்றிணையும் கேது-புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் கேது புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். கலை, எழுத்து, இசை தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். சிறப்பான செயல்திறனால் பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கேது புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் தொடர்பாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள், உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் புதிய திட்டங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் கேது புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். இதனால் பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வுகள் கிடைக்கலாம். புதிய திட்டங்களை தொடங்கினால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்களுடனான உறவு வலுபெறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications