Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள தசாங்க யோகம்: இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
Mercury Jupiter Form Dasanga Yog: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் குருவும், புதனும் தசாங்க யோகத்தை உருவாக்கவுள்ளனர். வேத ஜோதிடத்தின் படி, புதன் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று 36 டிகிரி கோணத்தில் அமைந்திருக்கும் போது தசாங்க யோகம் உருவாகும். அந்த வகையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் குரு மற்றும் புதனால் தசாங்க யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்து, வருமானத்தில் நல்ல உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் புதன் குருவால் உருவாகியுள்ள தசாங்க யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
தசாங்க யோகமானது மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத்தரும். முக்கியமாக பணிபுரிபவர்கள் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அலுவலகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் தொடர்பான முடிவுகளை சிறப்பாக எடுப்பீர்கள். புதிய தொழில் செய்ய விரும்பி முயற்சித்தால், நல்ல பலனைப் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தசாங்க யோகமானது வருமானத்தில் உயர்வை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் முயற்சித்தால் எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். மேலும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அரசு தொடர்பான வேலைகளை செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். முக்கியமாக குருவின் அருளால் நிறைய பணத்தை சேமித்து வெற்றி பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தசாங்க யோகமானது மங்களகரமானதாகவும், பலவிதமான நன்மைகளையும் வழங்கும். முக்கியமாக இந்த யோகத்தால் துணிச்சலும், தைரியமும் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையும் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications