Latest Updates
-
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
12 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணையும் குரு-புதன்: இந்த 3 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கபோகுது
Mercury Jupiter Conjunction 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்பு மற்றும் எதிரி கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கும். அவ்வாறு கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும். புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் மே 07 ஆம் தேதி நுழையவுள்ளார். அதே வேளையில் குரு பகவான் மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மிதுன ராசியில் புதன் மற்றும் குருவின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியை தருவதாகவும், நிதி நன்மைகளை வழங்குவதாகவும் இருக்கப் போகிறது. இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணையும் குரு-புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது மற்றும் பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இதனால் நிதி நிலைமை வலுவடையும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். வசதிகள் அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்வில் ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாமியார், மாமனாருடனான உறவு வலுவடையும். புதிய வேலைகளை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications