Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 07 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப்போகுது.
Mercury Direct In Pisces On April 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
தற்போது புதன் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் வருகிற ஏப்ரல் 07 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். அதுவும் புதன் சுமார் 20 நாட்களுக்கு பிறகு மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.

இப்படி புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும், சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். இப்போது மீன ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காணவுள்ளனர். முக்கியமாக ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக பல நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். லாப வீட்டில் புதன் இருப்பதால், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பெற்றோர் மற்றும் ஆசிரியரின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். புதனின் ஆசியால் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது நிறைவேறும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறக்கூடும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதனின் ஆசியால் அறிவாற்றலும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
