Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
ஆகஸ்ட் 11-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது...
Mercury Direct In Cancer On 11 August 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் கிரகங்களில் புதன் குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர்.
புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். தற்போது புதன் கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பின்னோக்கி பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி கடக ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது 1 வருடம் கழித்து புதன் கடக ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 மற்றும் 6 ஆவது வீட்டின் அதிபதியான புதன் 4 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். தாயாருடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி படிப்படியாக அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். நல்ல பொருள் இன்பத்தைப் பெறக்கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு இனிமையாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டின் அதிபதியான புதன் இரண்டாவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பேச்சுத்திறன் சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். இதனால் பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதுமண தம்பதிகள் சந்திக்கும் குழந்தை தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications