Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
புதன் கடக ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 4 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...!
ஜோதிடத்தின் படி அனைத்து கிரகங்களும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனால் சில சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் இன்று(ஆகஸ்ட் 11) கிரகங்களின் இளவரசரான புதன் கடக ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கிரகங்களின் இளவரசரான புதனின் இந்த மாற்றம் ஒருவரின் பேச்சு, நடத்தை மற்றும் புத்திக்கூர்மை போன்றவற்றில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான பலன்களை ஏற்படும். கடகத்தில் புதன் நேரடி நிகழ்வு ஆகஸ்ட் 11, 2025 அன்று மதியம் 12:22 மணிக்கு நடைபெற்றது. இதனால் சில ராசிக்காரர்கள் நேர்மாறான பலன்களையும், சில ராசிக்காரர்கள் எதிர்மாறான பலன்களையும் அனுபவிக்கப் போகிறார்கள். இந்த பதிவில் புதனின் வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டத்தை அடையப்போகிற ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
புதன் தற்போது மேஷ ராசியின் நான்காவது வீட்டில் நேரடியாக சஞ்சரிக்கிறது. நான்காவது வீட்டின் வழியாக புதன் செல்வதால் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான பலன்கள் உருவாகப்போகிறது. எனவே இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். அவர்களின் பொருளாதார நிலை மேம்படலாம் மற்றும் வேலையில்லாதவர்கள் விரும்பிய வேலைகளை எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில், வணிகர்கள் பல்வேறுபுதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது சரியான காலகட்டமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் புதிய வேலையில் சேர விரும்பினால், எந்த பிரச்சனையும் இல்லாமல் புதிய வேலையில் சேரலாம். இந்த காலகட்டத்தில் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
புதன் மிதுன ராசியின் இரண்டாவது வீட்டில்சஞ்சரிக்கப் போகிறார். புதன் இரண்டாவது வீட்டில் இருக்கும்போது, சாதகமான பலன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் பதினொன்றாவது வீட்டில் புதன் நேரடியாக சஞ்சரிக்கப் போகிறார். இது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். இந்த ராசியில் பிறந்தவர்கள் பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் திறனைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு புதன் மூலம் நிதி விஷயங்களில் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அவர்கள் அதிகளவு சம்பாதித்து அதை நன்றாக நிர்வகிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் அளவிற்கு சம்பாதிப்பார்கள். குடும்பம், பரம்பரை அல்லது இரண்டிலிருந்தும் செல்வம் அல்லது சொத்துக்களைப் பெறுவதற்கான காலகட்டம் இது. விலையுயர்ந்த பொருட்கள், நகைகள் மற்றும் ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் நல்ல உறவைப் பேணவும், மகிழ்ச்சியான சூழ்நிலையைப் பராமரிக்கவும் முடிகிறது. அவர்களின் முயற்சிகளுக்கு ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.
துலாம்
புதன் தற்போது துலாம் ராசியின் பத்தாவது வீட்டில் குடியேறுகிறார். புதன் கடகத்தில் இருக்கும்போது, அவர்கள் மிகவும் சாதகமான சூழ்நிலைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமான நிலைகள் உயர வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம் மற்றும் அவர்களின் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைப் பெறலாம்.
மாணவர்களுக்கு, புதனின் இந்த மாற்றம் கல்வியில் வெற்றியைக் கொடுக்கப்போகிறது மற்றும் போட்டித் தேர்வுகளை சிறப்பாக எழுதுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்கப்படும். பழைய முதலீடுகள் உங்களுக்கு லாபத்தைக் கொடுக்கலாம், மேலும் வணிகர்கள் புதிய லாபம் தரும் ஒப்பந்தங்களை எதிர்பார்க்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












