Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
புதன் விருச்சிக ராசியில் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் சூழப்போகுதாம்... ஜாக்கிரதை...!
கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் விருச்சிக ராசியில் அஸ்தமனமாகிறது. நவம்பர் 30-ம் தேதி புதன் தன் சக்தியை இழந்து பலவீனமாகிறது. புத்திக்கூர்மையின் கிரகமான புதன் மனித வாழ்க்கையின் பல அம்சங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கிரகமாகும். எனவே புதனின் அஸ்தமனம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஜோதிடத்தில் அதிவேகமாக நகரும் இரண்டாவது கிரகம் புதன். புதன் ஒரு ராசியில் 14-30 நாட்களுக்கு நிலைத்திருக்கும். புதனின் சக்தி சூரியனை நெருங்கும் போது குறைகிறது. நவம்பர் 30 அன்று விருச்சிக ராசியில் புதன் அஸ்தமனமாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
புதனின் அஸ்தமனம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல மோசமான விளைவுகளைத் தருகிறது. அவர்களின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் மற்றும் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் அவர்களைத் தாக்கலாம்.
மேலும் எதிர்பாராத பல சவால்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. உடல்நிலையை கருத்தில் கொண்டு முறையான சிகிச்சை எடுக்க வேண்டும். நிதிரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது. சிந்திக்காமல் செய்யும் காரியங்கள் பின்னாளில் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
விருச்சிக ராசியில் புதன் அஸ்தமானாவது மேஷ ராசிக்கு பல மோசமான பலன்களைத் தருகிறது. வாழ்க்கைத்துணையுடன் அடிக்கடி வாக்குவாதங்கள் மற்றும் சச்சரவுகள் ஏற்படும். மேலும் கடமைகளை நிறைவேற்றுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். குடும்ப பிரச்சனைகள் தீவிரமடையும். அதே நேரத்தில் அதிகப்படியான செலவு நிதி நிலைமையை மோசமானதாக மாற்றும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு புதன் பலவிதமான நெருக்கடிகளை வாழ்க்கையில் தருகிறார். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கலாம். காதலில் இருப்பவர்கள் தற்காலிகமாக பிரிய வாய்ப்பு உண்டு.
இது அவர்களின் மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். ஆரோக்கிய பாதிப்பால் அவர்களால் சமாளிக்க முடியாத திடீர் செலவுகள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்படலாம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உங்களுக்கு எதிரான வேலைகள் தூண்டப்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் அஸ்தமனம் பல எதிர்மறை மாற்றங்களைக் கொண்டுவருகிறது. பெரும்பாலும் வீட்டு வேலைகள் பாதியில் நிற்கும் நிலை உள்ளது. முதலீடுகள் மற்றும் சேமிப்புகளில் இழப்புகள் அதிகரிக்கும். மேலும் பண விஷயத்தால் அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அலுவலகத்தில் ஏற்படும் சிக்கல்கள் உங்களை நிலைகுலையச் செய்யலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் மேலும் தாமதமாகலாம். பணப் பிரச்னையால் குடும்பத்தில் வாய்த் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. அது உங்கள் வாழ்க்கையை மேலும் துயரமாக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியிலேயே புதன் அஸ்தமானவதால் அவர்களுக்கு அதிக சவால்களை அளிக்கிறது. மேலும் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் அவர்களின் பயத்தை அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிதி பிரச்சினையை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள், அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். முதலீடுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது உங்களை சிக்கலில் மாட்டிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
