Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
விருச்சிகத்தில் அஸ்தமனமாகும் புதன்: நவம்பர் கடைசியில் இந்த 3 ராசிக்கு முன்னேற்ற பாதை திறக்கப்போகுது..
Mercury Combust In Scorpio On 30 November 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் தான் புதன். இந்த புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது அஸ்தமனமாகி, உதயமாகவும் செய்வார். அப்படி புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் ஒருவரது பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் போன்றவற்றில் தெரியும். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். மேலும் நவம்பர் இறுதியில், அதாவது நவம்பர் 30 ஆம் தேதி புதன் விருச்சிக ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். புதன் அஸ்தமனமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது புதன் அஸ்தமனமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். ஊடகம், தகவல் தொடர்பு போன்றவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு நவம்பர் இறுதி முதல் நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக வாய்ப்புள்ளது. தலைமைப்பண்புகள் அதிகரிக்கும். வேலையை சரியான நேரத்தில், சிறந்த முறையில் செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடுகளின் மூலம் நிறைய லாபத்தைப் பெறுவீர்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நிறைய லாபத்தைப் பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நிறைய லாபத்துடன், வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications