Latest Updates
-
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
விருச்சிக ராசியில் புதன் அஸ்தமனமாவதால் நவம்பர் 30 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
Mercury Combust In Scorpio On 30 November 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர் புதன். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
கிரகங்களில் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் நவம்பர் 26 ஆம் தேதி இந்த புதன் விருச்சிக ராசியில் வக்ரமாகவுள்ளார். அதைத் தொடர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி புதன் அஸ்தமனமாகவுள்ளார்.

புதன் அஸ்தமனமாவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இன்னும் சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். குறிப்பாக சில ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது விருச்சிக ராசியில் புதன் அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட நேரிடும். தொழில் ரீதியாக பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். யாருடனும் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். முக்கியமாக தேவையற்ற செலவுகளை அதிகமாக சந்திக்க நேரிடும் .
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களில் அதிகம் ஈடுபட நேரிடும். இதன் மூலம் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். முக்கியமாக பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணம் தொடர்பான எந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் கவனமாக சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திப்பீர்கள். பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் ஈகோ அதிகரிக்கும். இதன் விளைவாக பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனால் குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவில் விரிசல் ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications