Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
புதன் மீன ராசியில் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறது. மீன ராசியில் புதன் மார்ச் 17, 2025 அன்று காலை 7:31 மணிக்கு அஸ்தமனம் அடைகிறது. இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சில ராசிக்காரர்கள் இந்த மாற்றத்தால் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கும் அதேவேளையில் சில ராசிக்காரர்கள் இதனால் எதிர்மறையான பலன்களை அனுபவிப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் புதன் அஸ்தமனத்தால் எதிர்மறையான பாதிப்புகளை சந்திக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மீனத்தில் புதன் அஸ்தமிப்பது மேஷ ராசிக்காரர்களின் வேலையில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். வேலை அழுத்தம் அதிகரிப்பதால் அவர்கள் வேலையில் கடுமையான சிரமங்களை சந்திக்க நேரிடும். நிலை மோசமாகும் போது, அவர்கள் வேலையை இழக்கக் கூட வாய்ப்புள்ளது. அவர்கள் தங்களின் தற்போதைய வேலையில் அதிருப்தியை சந்திக்கலாம், இதன் விளைவாக, அவர்கள் வேலையை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம்.
புதிய வேலைகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கலாம். இருப்பினும், மேஷ ராசிக்காரர்களுக்கு இதனால் எந்தப் பயனும் இருக்காது. வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் ஏமாற்றங்களை சந்திக்கலாம், எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். சக ஊழியர்கள் உங்கள் நட்பை அல்லது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தலாம். இதன் விளைவாக அவர்கள் அலுவலகத்தில் அவமானங்களை சந்திக்கலாம்.
கடகம்
மீன ராசியில் புதன் அஸ்தமிப்பதால் கடக ராசிக்காரர்கள் தங்கள் வியபாரத்தில் சில பின்னடைவுகளை சந்திக்கலாம், சூழலை கையாள்வது மிகவும் கடினமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள், அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் வேலையிடம் அடிக்கடி மாறுவதால், அவர்கள் தொடர்ந்து பதட்டமாகவும், மனச்சோர்வுடனும் இருப்பார்கள்.
அவர்கள் ஒரு புதிய வியாபாரத்தைத் தொடங்க விரும்பினால், அதில் அவர்கள் வெற்றியைக் காண்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்களின் நிதிநிலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கலாம். இதன் விளைவாக, அவர்கள் சில சமயம் மகிழ்ச்சியாகவும், சில சமயம் கவலையாகவும் உணர்வார்கள்.
சிம்மம்
இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில் பெரிய ஆபத்துகளில் சிக்கலாம். வேலையில் இருப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை சரியான நேரத்தில் முடிக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். இதன் விளைவாக அவர்கள் கடுமையான விரக்திக்கு ஆளாக நேரிடும்.
புதன் அவர்களுக்கு பாதகமான வீட்டிற்கு வருவதால் அவர்களின் நிதிநிலை கடுமையாக வீழ்ச்சியடையும். சட்ட பிரச்சினைகளில் உள்ளவர்கள் அவர்களுக்கு பாதகமான தீர்ப்புகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் மீது சில திருட்டுப்பழி சுமத்தபடக்கூடும்.
துலாம்
புதன் மீன ராசியில் அஸ்தமனமாவதால், துலாம் ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் கடுமையான அதிருப்தி அடையலாம். துலாம் ராசிக்காரர்கள் தற்போதைய நிலையில் வாழ்க்கையின் அனைத்து முயற்சிகளிலும் தோல்வியை சந்திக்கலாம்.
சில தேவையற்ற காரணங்களுக்காக, அவர்கள் வேலைகளை மாற்ற வேண்டியிருக்கலாம். வேலையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் துலாம் ராசிக்காரர்களின் கவலைகளை அதிகரிக்கும். இந்த நேரத்தில் அவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனும் குறைவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

