Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
செவ்வாய் பெயர்ச்சியால் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்..
Mars Transit In Virgo On July 2025: ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் பயணிப்பார்.
இதுவரை செவ்வாய் சூரிய பகவானின் சிம்ம ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 28 ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்குள் நுழைந்தார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். புதனின் ராசிக்கு செவ்வாய் சென்றிருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக சில ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வெற்றியையும், முன்னேற்றத்தையும் பெறவுள்ளனர். இப்போது செவ்வாய் கன்னி ராசிக்குள் சென்றுள்ளதால் தொழில் ரீதியாக எந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். சட்ட விஷயங்களில் முடிவுகள் சாதகமாக வரும். வாழ்க்கையில் புதிய சாதனைகளைப் புரிவீர்கள். உறவினர்களுடனான உறவு வலுவடையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனை பாராட்டுவார்கள். சில முக்கியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். தைரியமான பேச்சால் முடிக்க முடியாத பல வேலைகள் சிறப்பாக முடிப்பீர்கள். முக்கியமாக இந்த செவ்வாய் பெயர்ச்சியால் படைப்பாற்றல் மற்றும் அறிவுசார் திறனைப் பயன்படுத்தி, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக மாறும். முதலீடுகளால் நல்ல பலனைப் பெறுவீர்கள். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications