Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூலை 28 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசியும் இதுல இருக்கா?
Mars Transit In Virgo On 28 July 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால், அந்நபர் ஆரோக்கியம், உறவுகள் மற்றும் பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். தற்போது செவ்வாய் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற ஜூலை 28 ஆம் தேதி செவ்வாய் ராசியை மாற்றவுள்ளார். அந்த பெயர்ச்சியின் போது செவ்வாய் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன்.

புதனின் ராசிக்கு செவ்வாய் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு மோசமாக பிரச்சனைகள் நிறைந்தாக இருக்கும். இப்போது செவ்வாய் கன்னி ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எந்த பெரிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணம் இருந்தால், அதைத் தள்ளிப் போடுங்கள். செவ்வாயின் மோசமான விளைவுகளை தவிர்க்க, செவ்வாய் கிழமைகளில் பருப்பு மற்றும் செம்பு பாத்திரங்களை தானம் செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறையும். காதல் வாழ்க்கையில் தவறான புரிதல்களால் பிரச்சனைகள் அதிகரிக்கும். திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். இதனால் பண பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். புதிய முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், அதை தவிர்த்திடுங்கள். செவ்வாயின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க, அனுமனுக்கு செந்தூரம் மற்றும் மல்லிகை எண்ணெயை வாங்கி கொடுத்து வழிபடுங்கள்.
மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பேச்சில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையில் சிக்கி அவதிப்பட நேரிடும். குடும்பத்தில் தவறான புரிதல்களால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பட்ஜெட் மோசமாகும். பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் எதையும் பொறுமையுடனும், விவேகத்துடனும் செய்ய வேண்டும். செவ்வாயின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க, அனுமனுக்கு செந்தூரத்தை வாங்கி கொடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
