Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
2 ஆண்டுகளுக்கு பின் சொந்த ராசிக்குள் நுழையும் செவ்வாய்: அடுத்த 45 நாட்கள் 12 ராசிக்கும் எப்படி இருக்கும்?
Mars Transit In Scorpio On 27 October 2025: ஜோதிடத்தில் கிரகங்கள் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். கிரகங்களில் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் அக்டோபர் 27 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.
இந்த விருச்சிக ராசியில் செவ்வாய் நுழைவதால், அதன் செல்வாக்கு அதிகரிக்கும். இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பிரச்சனைகளை அதிகரிக்கும். இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் அடுத்த 45 நாட்கள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் வெற்றியையும், வியாபாரத்தில் நிதி ஆதாயத்தையும் காண்பார்கள். உறவுகள் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் கவலைகள் நீங்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய நட்புகள் கிடைக்கும். இருப்பினும் முக்கிய முடிவுகளை இக்காலத்தில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வணிகத்தில் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். நெட்வொர்க்கிங் மற்றும் தகவல் தொடர்பு தொடர்பான துறையில் இருப்பவர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அனுபவம் வாய்ந்தவர்களுடன் நல்லுறவுகளை உருவாக்குவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோபத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இருந்தாலும் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் உள்ளவர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் பெரிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மாமியார் மூலம் நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் உங்களின் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும். வேலையில் மன அழுத்தம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக அடுத்த 45 நாட்கள் ஹோட்டலில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். அதுவும் அந்த முடிவுகள் சாதகமாக வரும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பிரச்சனைகளின் அதிரிக்கும். இக்காலத்தில் எந்த புதிய முயற்சிகளையும் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வேலை தொடர்பான எந்த ஒரு பயணங்களையும் தவிர்க்க வேண்டும். காதல் விஷயங்களில் அடுத்த 45 நாட்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் தொழில் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாப கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. செவ்வாயின் ஆசியால் நல்ல நிதி நன்மைகளும், வெற்றிகளும் குவியும். மன அமைதி அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதாரணமாக இருக்கும். தொழிலில் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஆனால் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்களின் பொறுப்புக்களை புத்திசாலித்தனமாக கையாண்டால் நன்மைகளைப் பெறலாம்.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வேலை மற்றும் வணிகம் இரண்டிலும் நல்ல வெற்றியையும், நிதி நன்மைகளையும் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications