Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
18 மாதங்களுக்கு பின் சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
Mars Transit In Scorpio 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் மிகவும் துணிச்சலானவர்களாக, எதற்கும் அஞ்சாதவர்களாக இருப்பர்.
இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது செவ்வாய் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். அதன் பின் செப்டம்பரில் துலாம் ராசிக்கு செல்லவிருக்கிறார். பின்பு அக்டோபர் மாதத்தில் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசிக்கு செவ்வாய் சுமார் 18 மாதங்களுக்கு பின் செல்லவுள்ளார். சொந்த ராசிக்கு செவ்வாய் செல்வது சற்று சிறப்பானது.
அதுவும் சில ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. இதன் விளைவாக புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் எடைக்கும், சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இப்போது விருச்சிக ராசிக்கு செல்லும் செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய சொத்தை வாங்கலாம். பரம்பரை சொத்துக்களால் நன்மை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. வணிகர்கள் கூட்டு தொழில் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். தாயுடனான உறவு நன்றாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். நீண்ட தூர பயணங்கள் நன்மை தரும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட், காவல்துறை, ராணுவத்துடன் தொடர்புடையவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஐடி மற்றும் ஊடகங்களில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய திறன்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications