Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
செவ்வாய் பெயர்ச்சியால் செப்டம்பர் 13 முதல் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறப்பாங்க.. உங்க ராசி என்ன?
Mars Transit In Libra On 13 September 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை பயணிக்கக்கூடியவர். தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியான செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் வலுவான நிலையில் இருந்தால், அந்நபர் அச்சமற்றவராக, எதையும் துணிந்து செய்யக்கூடிய நபராக இருப்பார்.
இப்படிப்பட்ட செவ்வாய் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் ராசிக்கு செவ்வாய் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். முக்கியமாக 3 ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி அற்புதமாக இருக்கப் போகிறது.

அதுவும் தொழில் ரீதியாக மிகவும் அதிர்ஷ்டமானதாக, முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கப் போகிறது. இப்போது செப்டம்பர் 13 ஆம் தேதி நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். உறவுகளில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, உறவினர்களிடையேயான உறவு வலுவடையும். திருமணமாகாதவர்கள் இப்பெயர்ச்சியால் தங்கள் துணையை சந்திப்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வைப் பெறலாம். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொன்றிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் எதிரிகளை வென்று வீழ்த்துவார்கள். இந்த பெயர்ச்சிக்கு பின் மனதில் இருந்த பயம் நீங்கி, மன தைரியம் அதிகரிப்பதைக் காணலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மன ரீதியாக மிகவும் சிறப்பாக உணர்வீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய தொழில் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். எந்த ஒரு திட்டத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் மனதில் வைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் வேலையை சிறப்பாக முடிப்பதோடு, புதிய பொறுப்புக்களையும் பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் இக்காலத்தில் கிடைக்கும். ஆனால் பேச்சை சற்று கட்டுப்படுத்த வேண்டும். இதனால் நிறைய செல்வத்தைப் பெறலாம். மொத்தத்தில் இந்த செவ்வாய் பெயர்ச்சி செல்வத்தையும், முன்னேற்றத்தையும் அள்ளித் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications