Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
18 மாதங்களுக்கு பின் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது..
Mars Transit In Leo 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராசி மாற்றம் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை பயணிப்பார். கிரகங்களில் செவ்வாய் தைரியம், வீரம், துணிச்சல், ஆற்றல், சகோதரர், சக்தி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் ஜூன் 07 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். சிம்மம் செவ்வாயின் நட்பு ராசி. எனவே இந்த செவ்வாயின் ராசி மாற்றம் சற்று சிறப்பான பலனையே தரும்.

இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி பொற்காலமாக இருக்கும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பார்கள். ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவார்கள். இப்போது செவ்வாய் சிம்ம ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் அந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். புதிய வேலையை தொடங்கவோ அல்லது இலக்கை அடையவோ முடியும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுக்களைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அரசு தொடர்பான வேலைகளில் இருந்த தடைகள் நீங்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் தலைமைப் பொறுப்புக்களையோ அல்லது புதிய அடையாளத்தையோ உருவாக்கலாம். சமூகத்தில் மதிப்பு, மரியாதை, புகழ் போன்றவை அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் ஒவ்வொரு வேலையையும் திறம்பட செய்து முடிப்பீர்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான சில நற்செய்திகளைப் பெறுவார்கள். செவ்வாயின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வேலை இல்லாமல் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
