Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் செவ்வாய்: செப்டம்பர் 03 முதல் இந்த 3 ராசிக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்..
Mars Transit In Chithirai Nakshatra On 03 September 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களில் செவ்வாய் 45 நாட்கள் வரை ஒரு ராசியில் இருப்பார். அதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
இப்படி செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் செவ்வாய் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 03 ஆம் தேதி செவ்வாய் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை இருப்பார்.

சொந்த நட்சத்திரத்திற்கு செவ்வாய் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் செல்வத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் குவியும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் தீர்ப்புகள் சாதகமாக வரும். படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மறைமுக எதிரிகளை எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். அதோடு புதிய பண வரவிற்கான புதிய வழிகள் திறக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் மற்றும் வணிக ரீதியாக சிறப்பாக இருக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ராணுவம், காவல்துறை, ஐடி, டாக்டர் போன்ற துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தாயுடனான உறவு வலுவடையும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பரஸ்பர புரிதலும் அதிகரிக்கும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வணிகர்கள் துணிச்சலான முடிவால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
