Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
செவ்வாய் கடக ராசிக்கு போவதால் உங்க ராசிக்கு நடக்கப்போவது என்ன? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம்தான்...!
போர்களின் கிரகமான செவ்வாய் அக்டோபர் 20, 2024 அன்று கடக ராசிக்குள் நுழைகிறது. கடக ராசி பொதுவாக செவ்வாய் கிரகத்தின் எதிரி ராசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் கிரகங்கள் பெரும்பாலும் தங்கள் தோஷங்களில் பலவீனமடைகின்றன. செவ்வாய் ஒரு ராசி விட்டு இன்னொரு ராசிக்கு செல்ல சுமார் 35 நாட்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் இந்த ஆண்டு செவ்வாய் 50 நாட்களுக்கு மேல் கடகத்தில் உள்ளது.
பொதுவாக தீய கிரகமாக கருதப்படும் செவ்வாய் கோபக்கார கிரகமாக கருதப்படுகிறது. கடகத்தில் செவ்வாயின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களையும் அளிக்கப்போகிறது. உங்கள் ராசிக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி பல மாற்றங்களை தரப்போகிறதும். அவர்களின் தைரியமும், மனஉறுதியும் அதிகரிக்கும். மேலும் அவர்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிடலாம். அன்புக்குரியவர்களுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பு அதிகரிக்கிறது. வாழ்க்கையே மகிழ்ச்சியானதாக மாறும். நிதி நிலையில் எந்த மாற்றமும் இருக்காது.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சி பல வழிகளில் நற்பலன்களைத் தரும். தொழில்ரீதியாக அவர்கள் நினைத்ததை சாதிக்கலாம். மேலும் வியாபாரம் தொடர்பாக தொலைதூரப் பயணம் செய்ய நேரிடலாம். வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். திருமண் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
செவ்வாய் மிதுன ராசியின் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் தொழிலில் பெரும் நெருக்கடிகள் மற்றும் பின்னடைவுகள் ஏற்படும். அனைத்து வழிகளிலிருந்தும் சிக்கல் சூழும். வியாபாரத்தில் இலக்கை அடைவது மிகவும் கடினமாக இருக்கும். பொருளாதாரத்தில் பின்னடைவுகள் ஏற்படுவதோடு, உடல் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அவர்களின் லக்னத்தில் சஞ்சரிக்கிறது. இது அவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் அதிகரிக்கும், இதனால் வருமானமும் அதிகரிக்கும், மேலும் தனிப்பட்ட நிதிநிலை உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
சிம்மம்
செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பல பயனுள்ள மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் வேலையில் மன அழுத்தம் நெருக்கடியை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வரலாம். நிதி நிலையில் சற்று சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் 11வது வீட்டின் வழியாக சஞ்சரிக்கிறார். இதனால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் உங்கள் வளர்ச்சிக்கான வழிகளை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். மேலும் பல பயண வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பயணத்தால் சில ஆரோக்கிய பிரசினைகள் ஏற்படலாம், எனவே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அவர்களின் 10-வது வீட்டின் வழியாக செல்கிறார். இது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வரமாக மாறும். வியாபாரத்தில் கிடைக்கும் வணிக நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும், உங்களின் தனிப்பட்ட சேமிப்பும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது உங்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. மேலும் கடின உழைப்பு மற்றும் தொடர் முயற்சியால் உங்களின் இலக்குகளை எளிதில் அடையலாம். வியாபாரத்தில் அதிர்ஷ்டம் உங்களுளுக்கு உறுதுணையாக இருக்கும். தொழிலில் அனைத்து விதமான நன்மைகளையும் அடையக் கூடிய நேரம் இது என்பதில் சந்தேகமில்லை. திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சி அவர்களின் 8-ம் வீட்டில் நிகழும். இதன் மூலம் நீங்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும். நிதிச் சிக்கல்கள் அடிக்கடி வந்தாலும், அவற்றைச் எளிதில் சமாளிக்கலாம். வாழ்க்கையில் சின்ன சின்ன சிக்கல்கள் எழுந்தாலும் அவற்றைக் கடந்து முன்னேற்றம் அடையும் நேரமிது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் 7-ம் வீட்டில் சஞ்சரிக்கிறது. இது உங்கள் உறவுகள் மற்றும் நட்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இது தொழிலில் வெற்றி அடையும் காலம் என்பதில் ஐயமில்லை. உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் சாதனைகள் நிகழ்வதற்கான காலமிது.
கும்பம்
செவ்வாய் கும்ப ராசிக்காரர்களுக்கு 6-ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது உங்கள் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருகிறது. அனைத்து தொழில் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. வியாபாரத்தில் பெரும்பாலும் கலவையான முடிவுகள் இருக்கும். ஆனால் படிப்படியாக நீங்கள் நிதி நன்மைகளை அடையலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் தரமான நேரத்தை செலவிடலாம்.
மீனம்
செவ்வாய் மீன ராசிக்கு 5-வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்க உதவும். மேலும் தொழிலில் மன அழுத்தம் மிக அதிகமாக இருக்கலாம். அதிக வருமானம் பெற வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் உங்களைத் தொந்தரவு செய்கிறது. இது உங்கள் நிதி நிலைமையை ஆபத்தில் ஆழ்த்துகிறது. கணவன்-மனைவி உறவில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல கடினமான சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












