Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுது...
Mars Transit In Cancer On 03 April 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். வலிமை, துணிச்சல், வீரம், தன்னம்பிக்கை, தைரியம், ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
இந்த செவ்வாய் ஏப்ரல் 03 ஆம் தேதி, அதாவது இன்று மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த ராசியில் ஜூன் வரை இருப்பார். கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடக ராசி செவ்வாய் நீசமடையும் ராசியாகும். அதாவது இந்த கடக ராசியில் செவ்வாய் பலவீனமாக இருப்பார். கடக ராசியில் செவ்வாய் பலவீனமாக இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதோடு தீ, பூகம்பம் போன்ற சம்பவங்கள் உலகில் அதிகரிக்கும். கடக ராசிக்குள் நுழைந்த செவ்வாயால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாயால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வீடு மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சொத்து, வீடு மற்றும் வாகனங்கள் போன்றவற்றில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வீட்டில் அமைதியின்மை மற்றும் மன உளைச்சல் ஏற்படலாம். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திட்டங்கள் தோல்வியடையக்கூடும். பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் வரை செல்ல வேண்டியிருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், ஆற்றலும் அதிகரிக்கும். இக்காலத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். வேலை தொடர்பாக மிகவும் சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான விஷங்களில் சாதகமான பலன்களைப் பெறக்கூடும். இருப்பினும், செவ்வாய் பலவீனமான நிலையில் இருப்பதால், வாழ்க்கையின் சில அம்சங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் நிதி ஆதாயங்கள் மற்றும் சில சேமிப்புகளுக்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே சேமித்து வைத்த பணத்தையும் செலவழிக்கக்கூடும். இக்காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக செலவு செய்வதை உணரலாம். ஆரோக்கியத்தில் குறிப்பாக உணவில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறவுகளில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏற்கனவே ஏதேனும் இரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த காலகட்டத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வேலையில் சிரமங்கள் அதிகரிக்கும். கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் மற்றும் பொறுப்பற்ற நடத்தையைத் தவிர்க்க வேண்டும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். வேலை தொடர்பான விஷயங்களை கவனமாகக் கையாள வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் தேவையற்ற செலவுகள் மற்றும் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். எதிர்பாராத செலவுகள், பயணம் தொடர்பான செலவுகள் அல்லது திட்டமிடப்படாத வேலை மாற்றங்களை சந்திக்க நேரிடும். நீதிமன்றத்தில் ஏதேனும் சட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால், முடிவுகளை ஒத்திவைப்பது புத்திசாலித்தனம். வெளிநாடு செல்லத் திட்டமிடுபவர்களுக்கு இது நன்மை பயக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. எதிர்பார்த்த அளவு லாபத்தை பெற முடியாமல் போகலாம். வெற்றிகளை அடைவதில் தாமதங்கள் ஏற்படலாம் அல்லது சில தடைகளை சந்திக்க நேரிடலாம். ஆனால் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலைகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்ப்க்கள் உள்ளன. கடின உழைப்பாளிகள் தங்கள் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக பல வேலைகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். இந்த காலகட்டத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அன்றாட வேலை மற்றும் திருமண வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. துணையுடன் நல்லுறவைப் பேண முயற்சிக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதால், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும், உடல்நலத்தில் பலவீனம் அல்லது சோம்பல் காரணமாக ஏற்கனவே செய்து வரும் வேலைகளில் உங்கள் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. வெளிநாடுகள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். கூடுதலாக, சச்சரவுகள், விபத்துக்கள் அல்லது பிற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் இயல்பை இனிமையாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் திருமண வாழ்க்கையில் மோதல்களை தவிர்க்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிய கருத்து வேறுபாடுகள் பெரிய பிரச்சினைகளாக அதிகரிக்கலாம். இக்காலத்தில் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பற்கள் அல்லது எலும்புகள் தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், இந்த காலகட்டத்தில் இந்த விஷயங்களை புறக்கணிக்காமல் இருப்பது முக்கியம். வணிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவொரு புதிய ஒப்பந்தங்களையும் கையாளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இதுவரை ஆரோக்கியத்தில் சந்தித்த பிரச்சனைகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும். வேலையில் வேகம் இருக்கும். வாழ்வில் பல கசப்பான, இனிமையான அனுபவங்களைச் சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உணவு மற்றும் வாழ்க்கை முறையில் நீங்கள் ஒழுக்கமாக இருந்தால், உங்கள் உடல்நலம் மேம்படுவது மட்டுமல்லாமல், கடந்த கால உடல்நலப் பிரச்சினைகளையும் சமாளிக்கலாம். சமூகத்தில் நிலை மேம்படும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல லாபத்துடன், வளர்ச்சி ஏற்படும். காதல் விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வருமான வழிகள் அதிகரிக்கும். ஆனால் மாணவர்கள் படிப்பில் ஆர்வமின்மை காரணமாக பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











