Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரர்கள் துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் போரின் கடவுளாக கருதப்படுகிறார். அக்டோபர் 20, 2024 அன்று செவ்வாய் கிரகம் கடக ராசிக்கு மாறுகிறது. இந்த கிரக மாற்றத்தில் வாழ்க்கையில் பல நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்கள் ஏற்பட உள்ளன. எனவே செவ்வாய் சுப ஸ்தானத்தில் இருந்தால் அற்புதங்களையும், தோஷ ஸ்தானத்தில் இருந்தால் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
செவ்வாய் கடக ராசிக்குள் நுழையும் போது, அது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடகத்தில் செவ்வாய் நுழைவது சில ராசிகாரர்களுக்கு மோசமான பலன்களைத் தரப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு, செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி அவர்களின் இரண்டாவது வீட்டில் நடைபெறுகிறது. இது பெரும்பாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டத்தை ஏற்படுத்தலாம். வேலையில் தவறான புரிதல்கள் மற்றும் பெரும்பாலும் வேலை இழப்புகள் ஏற்படலாம்.
வியாபாரத்தில் பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும், செலவுகள் மிகப்பெரியதாக இருக்கலாம். திருமண வாழ்க்கையில் சண்டைகள் மற்றும் பிரச்சனைகள் அதிகரித்து இருவரும் பிரியும் நிலை கூட ஏற்படும், மேலும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அவர்களின் பன்னிரண்டாவது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி ஏற்படும். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலைமை மோசமடையும். மேலும் வேலையில் அழுத்தம் அதிகரிக்கலாம் மற்றும் நீங்கள் வேலை செய்ய விரும்பாமல் இருக்கலாம். இந்த நேரத்தில் செவ்வாய் உங்களுக்கு கடினமான நாட்களை முன்வைக்கிறது.
துணையுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. செலவுகளை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிதிநிலை மோசமாகும். தற்போதைய சூழ்நிலை விஷயங்களை மிகவும் சவாலானதாக மாற்றலாம். சில நேரங்களில் உடல்நலப் பிரச்சினைகள் கூட ஏற்படலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 8-வது வீட்டில் சஞ்சரிக்கிறது. இதன் விளைவாக, நீங்கள் எதிர்பார்ப்பதை விட இரண்டு மடங்கு அதிக சிக்கலை நீங்கள் அடிக்கடி சந்திக்க நேரிடும். சேமிப்பு பலமடங்கு குறையக்கூடும். வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.
வேலையில் ஏற்படும் மன அழுத்தம் மன ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். பெரும்பாலும் நிதிக் கடமைகள் உங்கள் வாழ்க்கையை மேலும் சிக்கலில் தள்ளும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமடைகிறது. பெரும்பாலும் உடல்நலப் பிரச்சினைகள் உங்களை பாடாய்படுத்தலாம். குடும்பத்தில் ஒற்றுமையின்மை உங்கல் மனஅமைதியைக் கெடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சி அவர்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருக்கும். வாழ்க்கையில் சில சமயங்களில் நீங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிலை கைமீறும். தொழிலில் மன அழுத்தம் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் நீங்கள் உங்கள் வேலையை விட்டுவிடுவது பற்றி கூட நினைக்கலாம்.
இது அடிக்கடி பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் செவ்வாய் கிரகம் உங்களை போட்டியில் தோற்கடிக்கிறது. நிதிரீதியாக அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
