Latest Updates
-
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா?
செவ்வாயின் வக்ர பெயர்ச்சியால் நவம்பர் மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களை கெட்ட நேரம் துரத்தப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்கள் மிகவும் முக்கியமானவை. கிரகங்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருந்தாலும் சில சமயங்களில் பின்னோக்கியும் நகரும். கிரகங்களின் இயக்கம் எப்படியிருந்தாலும் அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இயக்கங்கள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையானதாகவும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையானதாகவும் இருக்கும்.
கிரகங்களின் தளபதியான செவ்வாய் மேஷ ராசியை ஆட்சி செய்கிறார், நவம்பர் மாதத்தில் செவ்வாய் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். எனவே செவ்வாயின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான காலகட்டத்தை கொண்டுவரப்போகிறது. செவ்வாயின் வக்ர பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பதட்டம், நிதி நெருக்கடி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளை அனுபவிக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் செவ்வாயின் வக்ர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
செவ்வாயின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கையைப் பாதிக்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்கலாம். அவர்களின் பேச்சில் பணிவிருக்காது. மற்றவர்களுடன் பேசும்போது பல வாக்குவாதங்கள் ஏற்படலாம், எனவே வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் தைரியம் அதிகரிக்கும், ஆனால் எந்த பணியையும் முடிக்க அவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில்ரீதியாக, செவ்வாயின் இந்த வக்ர பெயர்ச்சியால், அவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம், மேலும் தேவையற்ற அலைச்சலை சந்திக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் வியாபாரிகள் ஒரு மந்தமான காலகட்டத்தை அனுபவிக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் வக்ர பெயர்ச்சி மோசமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் நிதிரீதியான இழப்புகளை சந்திக்க நேரிடும், மேலும் நன்றாக சிந்தித்து பெரியவர்களுடன் ஆலோசித்தப் பிறகே எந்தவொரு முதலீட்டையும் செய்ய வேண்டும். வேலையில் சில தடைகள் ஏற்படலாம், எனவே உங்கள் வேலையில் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.
திருமண வாழ்க்கையில், சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, மேலும் பிரச்சினைகளைத் தீர்க்க வெளிப்படையான உரையாடல் அவசியம். சொத்து தொடர்பான விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்படலாம், மேலும் நீங்கள் திட்டமிட்டு சூழ்நிலையை அணுக வேண்டும். கண் தொடர்பான சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாயின் வக்ர பெயர்ச்சியால் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே பின்னடைவுகளை சந்திப்பார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் தொடர்பு திறன்கள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம். அவர்களின் தொழில் வாழ்க்கையில் புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
அவர்களின் காதல் வாழ்க்கையில் பல்வேறு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், அவர்களுடன் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. நீண்ட காலமாக நீங்கள் ஏதேனும் பெரிய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தால், இந்த காலகட்டத்தில் அது மேலும் தீவிரமாக வாய்ப்புள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
