Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
வக்ர நிலையில் மிதுனம் செல்லும் செவ்வாய்: 2025 ஜனவரியில் இந்த 3 ராசிக்காரர்களின் கனவு நனவாகப் போகுது..
Mars Retrograde In Gemini On January 2025: 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். வருகிற 2025 ஆம் ஆண்டு பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதால், பல ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நவகிரகங்களில் வலிமை, வீரம், தைரியம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது நிலையை மாற்றக்கூடியவர். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். தற்போது செவ்வாய் கடக ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். வக்ர நிலையில் பயணித்து வரும் செவ்வாய் ஜனவரி மாதத்தில் வக்ர நிலையில் மிதுன ராசிக்கு செல்லவுள்ளார்.

செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் நிச்சயம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர செவ்வாய் பெயர்ச்சியானது அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்து, செல்வ நிலையில் உயர்வை ஏற்படுத்தவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
2025 ஜனவரியில் மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை வலுபெறும். சிந்தித்து வேலை செய்தால் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகும். வியாபாரிளுக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்ளலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
2025 ஜனவரியில் துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். உங்களின் திறமை வெளிக்கொணரப்படும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். இதன் விளைவாக உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
சிம்மம்
2025 ஜனவரியில் சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பாராட்டைப் பெறும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications